06.05.2008 அன்று வவுனியாவில் மரணித்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளருமான தோழர் பவான் (கந்தையா செல்வராசா) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. இவர் வவுனியா எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதில் அரும்பணியாற்றினார். விடிவினை நோக்கி மக்களை அரசியல்மயப்படுத்துவதிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இன்று(06) கைது செய்யப்பட்ட மேலும் 2 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர்கள் இன்று(06) கைது செய்யப்பட்டனர்.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று(6) நடைபெறுகின்றது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று(06) காலை ஆரம்பமானதுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04 மணியுடன் நிறைவடையவுள்ளன. நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
05.05.1999இல் வவுனியாவில் மரணித்த பளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தோழர் குணம் (வீரகத்தி குணரத்தினம் – திருநாவற்குளம்) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
கல்கிசை கடற்கரை வீதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 09 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 மாணவர்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களை இன்று(05) ஆஜர்ப்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளைய(06) உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அரச மற்றும் தனியார் துறையினர்களுக்கு அறிவித்துள்ளது. அரச நிறுவனங்களில் அதிகாரிகளின் விசேட விடுமுறை தொடர்பான நிறுவன சட்டக்கோவைக்கு அமைய விடுமுறைகளை வழங்க முடியும்.
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் To Lam-I சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.