Header image alt text

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட கைதி தொடர்பில், கைது செய்யப்பட்ட அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவருக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk), இன்று மாலை நாட்டை வந்தடைந்தார்.  இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவர், நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரையும், வடக்கு கிழக்கின் ஆர்வலர்களையும் சந்திப்பதற்குத் திட்டமிட்டுள்ளார். அத்துடன், கொழும்பிலும் சிவில் சமூகத்தினரையும், கர்தினாலையும் அவர் சந்திக்கவுள்ளார்.

Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.  36.9 மில்லியன் ரூபாய் வருமான வரியை செலுத்தாதமைக்கு எதிராக, உள்நாட்டு இறைவரி ஆணையாளரினால் தாக்கல் செய்த வழக்கில் சஜின் வாஸ் குணவர்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read more

இந்திய அரசாங்கத்தின் இலவச விமான பயண வசதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் நாடு திரும்புவதற்கு எதிர்பார்க்கும் இலங்கை பிரஜைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்வதற்கான செயற்பாடுகள் இன்றும்(23) நாளையும்(24) மாத்திரம் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். Read more

வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் மைதானத்தில் லட்சுமணன் நற்பணி மன்றத்தினால் நடத்தப்பட்ட கிராமிய விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக எமது கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்) அவர்கள் கலந்து விழாவினை சிறப்பித்த போது…. Read more

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று(23) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதியமைச்சரின் தலைமையில் நீதியமைச்சில் இன்று(23) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.இதற்கமைய நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்கள் மற்றும் ஆணையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். Read more

இந்த ஆண்டில் ஜப்பானிய அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ், பாதுகாப்பு உதவி பெறும் 8 நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஜப்பானின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  கடல்சார் கண்காணிப்பு மற்றும் அனர்த்த மீட்பு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த உதவியில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களும் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் நீதிகோரி அணையா தீபம் ஏற்றி, போராட்டமொன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய போராட்டமாக ‘அணையா தீபம்” என்ற பெயரில் குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி எதிர்வரும் 23 ஆம், 24 ஆம், 25 ஆம் திகதிகளில் செம்மணி வளைவு பகுதிகளில் அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுமூலம் செல்ல முயன்றதாகக் கூறப்படும் மூவர் தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த அவர்கள் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Read more

இஸ்ரேலில் பணிபுரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் ஐவர் நாட்டிற்கு வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேலுக்கு மீண்டும் பணியாளர்களை அனுப்புவது இடை நிறுத்தப்பட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு செல்லவிருந்த 119 பணியாளர்கள் நாட்டில் உள்ளனர். Read more