ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள போர்டோ நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது ட்ருத் சமூக வலைத்தள பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க விமானங்கள் ஈரான் வான்வௌியை விட்டு வௌியேறியுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். Read more
தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்ட புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கும், இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோ மற்றும் அதன் ஏனைய பிரதிநிதிகளுக்கு இடையே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இன்று (21) நள்ளிரவு 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பரீட்சைகள் திணைக்களமானது இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடாது என்றும், சமூக ஊடகங்களில் இதுவரையில் உலா வருகின்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும், நிதி முறைகேடு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவரது ஆட்சி காலத்தில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுதாரபுரம் எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. லக்ஸ்மன் ஜெயவர்தன இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
ஈரானில் உள்ள இலங்கை மற்றும் நேபாளம் நாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குவதாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் நேபாள அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைய இந்த பணிகள் இடம்பெறுவதாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதன்படி, ஈரானில் உள்ள இலங்கையர்களும் நேபாளம் மக்களும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை மேயரும், எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், கட்சியின் தொழிற்சங்க பிரிவு பொறுப்பாளருமான ஆசிரியர் தோழர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் நேற்று எமது கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும், தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகரையும் சந்தித்துள்ளார். மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களையும் ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற்தடவையாகும்.
தங்கமுலாம் பூசப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கி தம்மிடம் இருக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் பர்டி ப்ரேமலால் திசாநாயக்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி வௌிக்கொணர்ந்துள்ளார். குறித்த துப்பாக்கி பொலிஸ் மத்திய துப்பாக்கி களஞ்சியசாலையில் இருந்து வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று அல்ல என விசாரணை அதிகாரிகள் கல்கிசை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு மருந்தான ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மருந்தில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொடிய பெக்டீரியா நீர் இருந்தமை நீதிமன்றத்தில் நேற்று(20) வௌிக்கொணரப்பட்டது. இந்த மருந்து தொடர்பில் நடத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் முடிவுகளை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்திற்கு தெரிவித்தபோது இது தெரியவந்தது.
19.06.2018இல் மரணித்த தோழர் கமல் அண்ணா (சின்னையா கமலபாஸ்கரன் – லண்டன்) அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் இன்று….