வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சந்தை நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டபோது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் கிராம அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். Read more
19.06.2005இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் – ஓமந்தை) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் 356 சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 9,190 வரை அதிகரித்துள்ளது. நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள தரவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
18.06.2021 இல் கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று… இவர் கழகத்தின் உரும்பிராய் பிரதேச அமைப்பாளராக இருந்த காலங்களில், கழகத்தின் இராணுவ செயற்பாடுகளில் மாத்திரமன்றி வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தார்.
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் இன்று(18) தமது கடமைகளை பொறுப்பேற்றார். கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதியமைச்சர் சுனில் வட்டகல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் சர்வ மத ஆசீர்வாதத்துடன் மேயர் கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த குமாரவும் இன்று(18) கடமைகளை பொறுப்பேற்றார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹாந்த அபேசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய இதற்கு முன்னர் குற்றத்தடுப்பு பிரிவின் பிரதானியாக கடமையாற்றினார். இவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) முற்பகல் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மூவருக்கும் பிணை வழங்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத்தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாதம்பை பிரதேசத்தில் சிலிக்கா மணல் அகழ்விற்காக மீண்டும் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதற்கு முன்னதாக அது தொடர்பில் சுற்றாடல் ஆய்வறிக்கையை கோருவதே உகந்தது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் மாதம்பை பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சுற்றாடல் நீதிக்கான மையம் மற்றும் பிரதேசவாசிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உயர் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டு பணியாளரான நிபுனி கிருஷ்ணஜினா எனும் பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயசிங்க இன்று(17) பிணை உத்தரவை பிறப்பித்தார். வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மன்றில் சமர்ப்பித்தது. சந்தேகநபர் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில் ஆட்சேபனையை முன்வைப்பதற்கு சட்ட மாஅதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று(17) கால அவகாசம் வழங்கியது.