இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
வவுனியா மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யயப்பட்ட தோழர் காண்டீபன் மற்றும் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தோழர் அருண் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் தோழர் மோகன் வவுனியா மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி ஆகியோர் மாநகர சபை ஆட்சியை கைப்பற்றிய பின்னர் கட்சியின் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செயலதிபரின் நினைவில்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.
வவுனியா மாநகரசபையின் முதலாவது மேயராக எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் (தொழிற்சங்க பிரிவு பொறுப்பாளர்) தோழர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் இன்று தெரிவு செய்யப்பட்ட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெலீ பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேயரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு மாநகர ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று(16) காலை ஆரம்பமானது. தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தஸாரின் பெயரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீசா ஸரூக்கின் பெயரும் கொழும்பு மேயர் பதவிக்கு முன்மொழியப்பட்டன.
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை துணை முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று(15) முற்பகல் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை துணை முகாமைத்துவ பணிப்பாளரொருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(15) முற்பகல் நாட்டை வந்தடைந்தார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்றிருந்தார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனி ஜனாதிபதி, வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். வர்த்தக சபையின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்தித்ததுடன் சுற்றுலாத்துறை பிரதானிகளையும் சந்தித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் நாடு திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2 நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் வான்வௌிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்காக அவர் இன்று(13) மீண்டும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தேசிய லொத்தர் சபையின் செயற்பாட்டு பணிப்பாளராக செயற்பட்ட துசித்த ஹல்லொலுவ எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.