நிகழ்நிலை காப்பு சட்டத்தில் (Online Safety Bill) சபாநாயகர் கையொப்பமிட்டமையை சவாலுக்குட்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தாக்கல் செய்த இந்த மனு ப்ரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணாக சபாநாயகர் நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார். Read more
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய, கொழும்பு பெஜட் வீதியில் (Paget Road) அமைந்துள்ள இல்லத்தை, அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் பயன்படுத்த ஏதுவாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவுகளை இரத்து செய்ய திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் தரப்பில் இன்று இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டை இடைநிறுத்த கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாத்தினர் முன்னிலையாகியிருந்தனர்.
தோழர் வெள்ளை (விஜயேந்திரன்) அவர்களின் தாயார் பூபாலப்பிள்ளை சாந்தம் அவர்கள் (27.02.2024) காலமானார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் தோழர் வெள்ளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அவருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளன. இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன. குறித்த கப்பல்கள் நேற்று காலி துறைமுகத்தை வந்தடைந்ததுடன், மார்ச் முதலாம் திகதி வரை காலியில் தரித்திருக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை கருத்திற்கொள்ளாமல், நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்ற சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழீழ மக்கள் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (PLOTE, DPLF) சிரேஷ்ர உபதலைவரும் , ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் (DTNA ) செயலாளருமான தோழர் இராகவன் , R.R ( வேலாயுதம் நல்லைநாதர் ) அவர்களின் அஞ்சலி நிகழ்வு கனடாவின் Toronto நகரில் இடம் பெற்றது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர். சம்பள பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக்காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எவ்வாறாயினும், அண்மையில் அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
27.02.2022இல் மரணித்த கிளிநொச்சி முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் அரபாத் (சிற்றம்பலம் திருச்செல்வம்) அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாள் இன்று….
காஸாவிற்கான சிறுவர் நிதியமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. காஸாவில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டத்திற்காக அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிதி ஒதுக்கீட்டை இந்த நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாகவும் வழங்கவுள்ளது.