Header image alt text

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன. தகுதி பெற்ற சுமார் 4000 பேரை நேர்முகப் பரீட்சைக்காக அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். Read more

துயர் பகிர்வோம்

Posted by plotenewseditor on 26 February 2024
Posted in செய்திகள் 

தோழர் தவம் (பாஸ்கரன்) அவர்களின் தாயார் திருமதி ரட்ணம் புரவி அவர்கள் (25.02.2024) காலமானார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் தோழர் தவம் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அவருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் மீறியுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் கையொப்பமிட்டுள்ளார். நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றும்போது சபாநாயகர் செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

எமது கழகத்தினதும் கட்சியினதும் சிரேஸ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு நேற்று (25.02.2024) வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்) தலைமையில் நடைபெற்றது. தலைமையுரையினைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் மற்றும் நினைவுக் கவிதைகள் என்பன இடம்பெற்றன. தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவரும், வட மாகாணசபை தவிசாளருமான சீ.வீ.கே சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

Read more

தோழர் இராகவன் (ஆர்.ஆர்) அவர்களின் பிரிவால் நாம் கொண்டுள்ள பெருந் துயரத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
பள்ளிக் காலம் தவிர்ந்த, தனது மொத்த வாழ்க்கையையும், நாற்பத்திரெண்டு வருட காலமாக தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த உன்னதமான, முதன்மையான போராளியாக அவர் திகழ்ந்தார். ‘புதியபாதை’ தோழர் சுந்தரம் அவர்களின் பாசறையில் இணைந்து, செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் அரவணைப்பிலும், நெறிப்படுத்தலிலும் சமூகப் புரட்சிக்குரிய போராளியாக தன்னை வார்த்தெடுத்துக் கொண்டார்.

Read more

25.02.1985இல் மரணித்த தோழர் சிவாஜிகணேசன் (மகாலிங்கம்- புதுக்குடியிருப்பு) அவர்களின் 39ஆம் ஆண்டுநினைவு நாள் இன்று….

மட்டக்களப்பு ரயில்வே கடவை காப்பாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 24 ரயில்வே கடவைகளில் கடமையாற்றும் ரயில்வே கடவை காப்பாளர்கள், தமது சேவையை நிரந்தரமாக்க கோரி இந்த கவனயீர்ப்பை முன்னெடுத்தனர். சுமார் 11 வருடங்களாக நிரந்தர நியமனமின்றி 250 ரூபா நாள் சம்பளத்திற்கு பணி புரியும் தம்மை கடமையிலிருந்து நீக்கி, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களை குறித்த கடமைக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளமைக்கு இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்க தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எதிர்வரும் 27 மற்றும் மார்ச் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தலுக்கு செலவிடப்படும் பணம் மட்டுப்படுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். எனினும், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இதுவரை ஒரு தேர்தலும் நடத்தப்படவில்லை. Read more

மலர்வு 19.02.1972 உதிர்வு 25.03.2015
25.03.2015ல் பிரான்ஸில் மரணமெய்திய தோழர் வில்சன் (எட்வேட் வில்சன்) அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவுகள்

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியா – இலங்கை இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. Read more