Header image alt text

எமது கழகத்தினதும் கட்சியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று காலை கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்றபோது…., Read more

உக்கிரமடைந்துள்ள மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட இலங்கை வௌிவிவகார அமைச்சு இந்தியாவிடம் நேரம் கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். அதற்காக இந்தியாவின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் அதன் பின்னர் மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் கூறினார். Read more

ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் இலவச மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள்  போஷாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்தே அரசு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. அதற்கமைய, தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படவுள்ளது. இந்த உணவு வழங்கும் திட்டத்துக்காக 16.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட செயன்முறையின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் உணவு தயாரிக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்திக் குறிப்பு-

Posted by plotenewseditor on 23 February 2024
Posted in செய்திகள் 

எமது கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் இறுதிக் கிரியைகள், வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் மாவட்டத் தலைமையகத்தில் நாளைமறுதினம் (25.02.2024) நடைபெற்று, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று நல்லடக்க நிகழ்வும் நடைபெறும்.
⁃ அஞ்சலி நிகழ்வு ஏற்பாட்டுக்குழு

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. தமது இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் உள்ளிட்ட இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் சனத்தொகையில் 40 வீதமானோருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்ணளவாக 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 22 கோடி அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) இன்று இயற்கையெய்தினார். அவருக்கு எமது வீர அஞ்சலிகள்.
இறுதி நிகழ்வு பற்றிய வியரம் பின்னர் அறியத்தரப்படும்

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக இம்மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் பயணித்த படகொன்று அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், படகோட்டி ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் எல்லை தாண்டி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது 19 தமிழக மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். Read more

ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளது. காலை 7.30 க்கு ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பில் சுகாதாரத்துறை வௌிக்கொணர்ந்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. Read more

வவுனியா இறம்பைக்குளத்தில் 21.02.2002இல் மரணித்த தோழர்கள் வாசன் (இராஜரட்ணம் ஜெயச்சந்திரன் – யாழ்ப்பாணம்), சத்தியா (கைலாசப்பிள்ளை செந்தமிழ்செல்வன்) ஆகியோரது 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..