Header image alt text

25.10.2024 ல் வவுனியாவில் காலமாகிய தோழர் சுந்தர் (முருகேசு நவரத்தினராசா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று….
இவர் யாழ் துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவர்.
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்
(தோழர் ஆனந்தியண்ணர்)
மலர்வு : 16.05.1945
உதிர்வு : 22.10.2021

Read more

22.10.2020 இல் மரணித்த, காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (பாலா அண்ணர்) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று..
மலர்வு – 1951.12.18
உதிர்வு – 2020.10.22

Read more

‘மாகாணசபை முறைமையும் அதிகாரப்பகிர்வும்’ எனும் தலைப்பில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) ஒழுங்கமைப்பில் தாயகத்தில் நடாத்தப்பட்டு வருகின்ற கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக, எதிர்வரும் 19.10.2025 அன்று கனடாவிலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கனடா நாட்டுப் பிரதிநிதிகளால் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 18 October 2025
Posted in செய்திகள் 

யாழ் சுழிபுரம் மேற்கைச்சேர்ந்த வி.கதிரவேலு (இளைப்பாறிய நிர்வாகசபை உத்தியோகத்தர், அரசினர் வைத்தியசாலை, வவுனியா) அவர்கள் 17/10/2025 வெள்ளிக்கிழமை காலமானார். இவர் அமரர் தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்) அவர்களின் அன்புத் தந்தையும், கழகத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரும், ‘புதிய பாதை’ ஆசிரியரும், கழகத்தின் முதலாவது தளபதியுமான அமரர் தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி – சுழிபுரம்) அவர்களின் அன்பு மைத்துனரும் (சகோதரின் கணவர்) ஆவார்.

Read more

18.10.2005இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் சேகர் (இராஜசிங்கம் இராஜசேகர் – சேற்றுக்குடா) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை நியமிப்பதற்கு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய விடுத்த கோரிக்கைக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கடிதம் இன்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேயிலை, சுற்றுலாத்துறை மற்றும் பரந்த வர்த்தக நடவடிக்கைகள் குறித்து, இலங்கை அதிக கவனம் செலுத்த தவறியுள்ளதனால், ரஷ்யாவுடனான நெருக்கமான வர்த்தக ஒத்துழைப்பினை இலங்கை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, ரஷ்யாவில் நிலைகொண்டுள்ள இலங்கை வர்த்தக மற்றும் தொழில்முறை தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர், ஜகத் சந்திரவன்சா தெரிவித்துள்ளார்.

Read more

பண்டாரவளை – எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரும் இலங்கையர்கள் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் போது காயங்களுக்கு உள்ளான மூவரும் தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read more