 காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை (27) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக  வலி தற்றதாக்கும் வகையில்  இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more
காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை (27) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக  வலி தற்றதாக்கும் வகையில்  இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more
 
		     இலங்கையர்களுக்கான மறு நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்க இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கான மறு நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்க இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. காணாமல் போன தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காலி, உனவட்டுன கடற்கரை பகுதியில் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பிலான தகவல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காணாமல் போன தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காலி, உனவட்டுன கடற்கரை பகுதியில் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பிலான தகவல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயல்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றில் ஏற்பட்ட முரண்பாட்டை   அடுத்து  யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே  குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயல்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றில் ஏற்பட்ட முரண்பாட்டை   அடுத்து  யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே  குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்தியாவில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தையடுத்தே, இலங்கையால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் சில கடல் பகுதிகளில் மீன்பிடி உரிமைகளை இந்தியா விட்டுக்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தையடுத்தே, இலங்கையால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் சில கடல் பகுதிகளில் மீன்பிடி உரிமைகளை இந்தியா விட்டுக்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபை உட்பட அனைத்து பயணிகள் பேருந்துகளின் சாரதிகளும், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டிகள் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபால இன்று தெரிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை உட்பட அனைத்து பயணிகள் பேருந்துகளின் சாரதிகளும், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டிகள் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபால இன்று தெரிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – காஸா விவகாரம் உள்ளடங்கலாக உலக நாடுகளில் நிலவும் தீவிர பிரச்சினைகளால் சர்வேதேச அரங்கில் இலங்கை விவகாரம் சற்று பின்தள்ளப்படக்கூடும் என தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இருப்பினும் பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை மீதான தமது அழுத்தம் தொடரும் என்றும் உறுதியளித் துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.
இஸ்ரேல் – காஸா விவகாரம் உள்ளடங்கலாக உலக நாடுகளில் நிலவும் தீவிர பிரச்சினைகளால் சர்வேதேச அரங்கில் இலங்கை விவகாரம் சற்று பின்தள்ளப்படக்கூடும் என தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இருப்பினும் பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை மீதான தமது அழுத்தம் தொடரும் என்றும் உறுதியளித் துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.  தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் இன்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.  தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் இன்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் 2 பெண்களின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மூவரும் எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை சொகுசு தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் 2 பெண்களின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மூவரும் எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை சொகுசு தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.