Header image alt text

02.01.1982 இல் மரணித்த புளொட் அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும்,’புதிய பாதை’ ஆசிரியரும், கழகத்தின் முதலாவது தளபதியுமான தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி – சுழிபுரம்) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
மார்க்சிச சிந்தனையாளரான தோழர் சுந்தரம் அவர்கள்
ஆரம்ப காலங்களில் காந்தீய அமைப்பின் செயற்பாடுகளில் அதிகூடிய பங்கினை வகித்து செயற்பட்டிருந்தார்.
தோழர் சுந்தரம் அவர்களின் நினைவுகள்!
மலர்வு – 06.05.1953 உதிர்வு – 02.01.1982

Read more

வெளிநாட்டில் காவல்துறை உத்தியோகத்தருக்கான அதியுயர் பதவியைப் பெற்ற முதல் இலங்கையர் என கருதப்படும் நிஷான் துரையப்பா அண்மையில் இலங்கை வந்துள்ளார். கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், இலங்கையில் அனைவராலும் பேசப்பட்ட யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகராதிபதியான அல்பிரட் துரையப்பாவின் மருமகனாவார். 2019 ஆம் ஆண்டு முதல் கனடாவின் பீல் மாகாணத்திற்கு பொறுப்பான காவல்துறை மா அதிபராக கடமையாற்றி வரும் நிஷான் துரையப்பா இலங்கையில் பிறந்தவர் என்ற வகையில் தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் பெரும் மரியாதையை வழங்கியவர். Read more

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை (TIN) பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கமொன்று இருப்பதை போலவே TIN இலக்கம் இருக்க வேண்டியதும் அவசியமாகும். Read more

புதிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாக W.A.சேபாலிகா சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. W.A.சேபாலிகா சந்திரசேகர, 1993 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் மதிப்பீட்டாளராக இணைந்து 30 வருடங்களுக்கும் மேலாக அந்நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அவர் இதுவரை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.