வட்டுக்கோட்டை காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரின் விளக்கமறியலில் எதிர்வரும் 16ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (02) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. Read more
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்த 180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பொறுப்பதிகாரி அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.
பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரிப்பதே அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்று வழி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். தவறான பொருளாதார தீர்மானங்களை எடுப்பதன் மூலம் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் கூறுவது போன்று பிரபலமான தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை இருளடையச் செய்ய தாம் தயாரில்லை எனவும் குறிப்பிட்டார். சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று இடம்பெற்ற “ஷில்ப அபிமானி 2023” எனும் கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. விமான நிலையத்தில் நிலவும் பயணிகள் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.