Header image alt text

04.01.1990 இல் மரணித்த தோழர் தேவன் (கிருஸ்ணப்பிள்ளை செல்வராஜா – புங்குடுதீவு) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

04.01.1985 ஆம் ஆண்டு மரணித்த தோழர் இ.ரவிசேகரன் (மாணவர் பேரவை) அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் காணி விடுவிப்பு செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். Read more

இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலை நாளைய தினம் (05) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த சிலையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். திருவள்ளுவர் சிலை 3 தொன் எடையில் 25 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. விசேடமாக, இந்த சிலை முழுவதுமாக தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்டு நெற்றியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வீதியின் குறிச்சிக்குளம் பகுதியில் இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. Read more

வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணிபுரியும் கடவை காப்பாளர்கள் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்புக் கோரியும், நிரந்தர நியமனத்தை வலியுறுத்தியும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரயில் கடவை காப்பாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் அவதானமாக ரயில் பாதையை கடக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினை தொடர்வதற்கு இடமளிக்க முடியாது எனவும், ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இதற்கமைய, இது தொடர்பில் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். Read more