07.01.2015இல் மரணித்த தோழர் வசந்தன் (சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் – கோவில்புதுக்குளம்) – வவுனியா இலங்கை போக்குவரத்துக் கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர்) அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 7 January 2024
Posted in செய்திகள்
07.01.2015இல் மரணித்த தோழர் வசந்தன் (சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் – கோவில்புதுக்குளம்) – வவுனியா இலங்கை போக்குவரத்துக் கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர்) அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 7 January 2024
Posted in செய்திகள்
திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழு இதனை தீர்மானித்திருந்தது. அதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் 10.30 வரை வாய்வழி வினாவுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 January 2024
Posted in செய்திகள்
எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என PAFFREL அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரகடனங்களுக்கு பொதுவான கட்டமைப்பை தயாரிப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பானர் ரோஹன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை இலக்கு வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தற்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ரோஹன ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.
Posted by plotenewseditor on 7 January 2024
Posted in செய்திகள்
முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 7 January 2024
Posted in செய்திகள்
தாய்லாந்து எல்லைப் பகுதியை அண்மித்து, மியன்மாரின் கெரன் மாகாணத்தின் மியாவெட்டி பகுதியில் பயங்கரவாத குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களையும் சிறப்பு நடவடிக்கையின் மூலம் மீட்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை – மியன்மார் வௌிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலும் BIMSTEC தூதுவர்கள் மற்றும் மியன்மாரின் பிரதி வௌிவிவகார அமைச்சர் இடையிலும் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலில் இது தொடர்பில் சாதகமான பதில் கிடைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்தார். Read more