Header image alt text

துயர் பகிர்வு

Posted by plotenewseditor on 8 January 2024
Posted in செய்திகள் 

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகளோடு, நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொள்கிறோம்.

கடந்த ஆண்டு இறுதியில் கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கைக்கும் கடன் வழங்குநர் நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜப்பான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜப்பான் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அதேநேரம், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு வெளியே கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் தேவைப்பாடும் உள்ளதாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் தேவாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியானது, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், பதாகைகளை ஏந்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக இலங்கை வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஷெனூகா செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தமது பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை அவர் சந்தித்து தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளார். முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை பிரதிநிதியாகவும் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் தாய்லாந்துக்கான தூதுவராகவும் ஷெனுகா செனவிரத்ன பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய செங்கடல் மற்றும் அதனை அண்மித்த பிராந்தியத்திற்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்பிவைக்க தயார் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த கப்பல்கள் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் Prosperity Guardian நடவடிக்கையில் இணைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கப்பலை அனுப்பிவைக்க வேண்டிய திகதி தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். Read more

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவின்  விளக்கமறியல் வெள்ளிக்கிழமை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு 05ம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் அச்சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர். Read more