கடந்த ஆண்டு இறுதியில் கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கைக்கும் கடன் வழங்குநர் நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜப்பான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜப்பான் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அதேநேரம், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு வெளியே கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் தேவைப்பாடும் உள்ளதாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.