இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக இலங்கை வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஷெனூகா செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தமது பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை அவர் சந்தித்து தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளார். முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை பிரதிநிதியாகவும் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் தாய்லாந்துக்கான தூதுவராகவும் ஷெனுகா செனவிரத்ன பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.