Header image alt text

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கு எனும் பெயர் சூட்டு விழா கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்பாணத்தில் தேசிய கல்வியியற் கல்லூரி அமைவதற்கு தனது சொந்த காணியில் சுமார் 207 பரப்பினை அன்பளிப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பெற்றோர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் சரஸ்வதி தம்பதிகளினன நினைவாக கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கம் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Read more

09.01.1991 ஆம் ஆண்டு மரணித்த தோழர் சிறி (கணேசன் சிறிகணேசபுனிதன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

அதிக விளைச்சலுடன் கூடிய நெற்பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் தமது நிபுணத்துவத்தை பகிரவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் லீ கியாங் இதனை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்வரும் சிறுபோக பருவத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயத்துறையை நவீனமயமாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக விசேட வைத்தியர் சவின் சேமகே நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  வெற்றிடமாகக் காணப்பட்ட பதவிக்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களில் இருந்து, சவின் சேமகே தெரிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட வைத்தியர் சவின் சேமகே இதற்கு முன்னரும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி குழுவினருடன் இவர்கள் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன குறிப்பிட்டார். சர்வதேச நாணய  நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். Read more

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ், தற்போது புனரமைப்பு பணிகள் பிற்போடப்பட்டுள்ள வீதிகளில் இந்த ஆண்டில் 15 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகளை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான செலவு 20 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், 6 மாதங்களில் குறித்த பணிகளை பூர்த்திசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டின் முதல் 6 மாதங்களில், தெரிவுசெய்யப்பட்டுள்ள வீதிகளை போக்குவரத்துக்கு ஏற்புடைய வகையில் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. Read more