அதிக விளைச்சலுடன் கூடிய நெற்பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் தமது நிபுணத்துவத்தை பகிரவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் லீ கியாங் இதனை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்வரும் சிறுபோக பருவத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயத்துறையை நவீனமயமாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.