Header image alt text

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 50வது சிரார்த்ததினம் இன்றாகும். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்ணம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோர் உயிர் நீத்தவர்களாவர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசாங்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி மற்றுமொரு பாரதூரமான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தயாராகின்றது. நிகழ்நிலை காப்பு சட்டமூலமே (Online Safety Bill) அதுவாகும். மக்களின் தகவலறியும் உரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமை என்பவற்றுக்கு இதன் மூலம் அழுத்தம் ஏற்படுவதாக பலரும்  விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், இந்த சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என உலகின் பிரபல இணைய சேவைகளை உள்ளடக்கிய ஆசிய இணைய கூட்டணி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு அறிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி நீண்ட கடிதமொன்றை அவ்வமைப்பு அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. Read more

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (11) முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாலை வேளைகளில் மேல், மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. Read more

கிழக்கு மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வௌ்ள நிலைமை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G. திசாநாயக்க தெரிவித்தார். அதற்கிணங்க, மட்டக்களப்பு மத்தி, கல்முனை, அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர சம்மாந்துறை கல்வி வலயத்தில், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மாத்திரம் மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) மூன்று நாட்கள் விஜயமாக இன்று (10) பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தார். இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவினை நினைவுகூரும் வகையில், இளவரசியின் இந்த விஜயம் அமைந்துள்ளது. பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் சகோதரியான இளவரசி ஆன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்கவுள்ளார். இளவரசியுடன், அவரது கணவரான வைஸ் அட்மிரல் திமோத்தி லோரன்ஸ் (Vice Admiral Sir Tim Laurence)  உள்ளிட்ட 07 பேர் இந்த விஜயத்தில் இணைந்துள்ளார். Read more