இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார். ஜனவரி 21 ஆம் திகதி திருகோணமலையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (10) நடைபெற்றது.
இதன்போது, தலைவர் தெரிவை பொது இணக்கப்பாடுடன் மேற்கொள்வதா அல்லது வாக்கெடுப்பிற்கு செல்வதா என்பது தொடர்பில் இன்று கலந்துரையாடி தீர்மானிக்குமாறு தலைவர் தெரிவிற்கு முன்நிற்கும் மூவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி, அவர்கள் மூவரும் இன்று கலந்துரையாடி இரகசிய வாக்கெடுப்பிற்கு செல்ல தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.