கடந்த சில நாட்களாக, அசாதாரண காலநிலை காரணமாக, வடக்கு கிழக்கில் வெள்ள நிலைமை ஏற்பட்டு அதன் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது நீங்கள் யாவரும் அறிந்ததே.Posted by plotenewseditor on 13 January 2024
Posted in செய்திகள்
கடந்த சில நாட்களாக, அசாதாரண காலநிலை காரணமாக, வடக்கு கிழக்கில் வெள்ள நிலைமை ஏற்பட்டு அதன் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது நீங்கள் யாவரும் அறிந்ததே.Posted by plotenewseditor on 13 January 2024
Posted in செய்திகள்
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர்ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 24 கைதிகள் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலின் போது 28 கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேற்று இடம்பெற்ற மோதல் தொடர்பாக 62 கைதிகள் கைது செய்யபட்டுள்ளனர் Read more
Posted by plotenewseditor on 13 January 2024
Posted in செய்திகள்
பிரித்தானிய இளவரசி ஆன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-505 விமானத்தினூடாக அவர் பிரித்தானியா நோக்கி பயணமாகியுள்ளார். கடந்த 10 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இளவரசி ஆன், தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்தார். இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இளவரசி நாட்டிற்கு விஜயம் செய்தார்.
Posted by plotenewseditor on 13 January 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு இன்று காலை பயணித்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார். அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதற்காக ஆண்டின் தொடக்கத்தில், உலகின் முக்கிய நாடுகள் பங்கேற்கும் கூட்டமே உலக பொருளாதார மன்றமாகும். சர்வதேச நிறுவனங்கள், அமைப்புகள், சிவில் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்களும் இதில் பங்கேற்று வருகின்றன. Read more
Posted by plotenewseditor on 13 January 2024
Posted in செய்திகள்
திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.