கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர்ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 24 கைதிகள் வெலிகந்த வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலின் போது 28 கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேற்று இடம்பெற்ற மோதல் தொடர்பாக 62 கைதிகள் கைது செய்யபட்டுள்ளனர்வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நிலவிய அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.