தோழமையுடன் அனைத்து கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு,
கடந்த சில நாட்களாக, அசாதாரண காலநிலை காரணமாக, வடக்கு கிழக்கில் வெள்ள நிலைமை ஏற்பட்டு அதன் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது நீங்கள் யாவரும் அறிந்ததே.குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் வெள்ளப் பாதிப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய நாற்பது வருடங்களின் பின்பு, சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் குளங்களுக்கும் களப்புப் பிரதேசங்களுக்கும் வந்து சேரும் மேலதிக நீரின் பாதிப்பு குறைவடையாமல் உள்ளது. திருகோணமலையின் ஈச்சிலம்பத்தை பிரதேச செயலகப் பிரிவிலும் வெருகல் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் தொடர்ந்தும் வெள்ள நிலைமை காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தினரிடமிருந்தும், அம்பாறை மாவட்ட நிர்வாகத்தினரிடமிருந்து உதவிகள் கோரப்பட்டுள்ளன. உதவி செய்ய விரும்புவோர் கீழ்க் குறிப்பிடப்படுபவர்களுடன் தொடர்பு கொண்டு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
அம்பாறை மாவட்டம் –
தோழர். பா. இரவிச்சந்திரன் (சங்கரி) – 0754980519
மட்டக்களப்பு மாவட்டம் –
தோழர். பொ. செல்லத்துரை (கேசவன்) – 0779818459
தோழர். ம. நிஸ்கானந்தராஜா (சூட்டி) – 0776839745
நன்றி.
12.01.2023