Header image alt text

14.01.2000இல் மரணித்த தோழர் செல்லக்கிளி மாஸ்டர் (வடிவேல் விஐயரட்ணம் – பருத்தித்துறை) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

14.01.1988இல் மரணித்த தோழர்கள் ரங்கன் (பெரியகல்லாறு), ஜோன்சன் (யாழ்ப்பாணம்), சேரலாதன் (குஞ்சுக்குளம்), வேலு (வில்வராஜா – குழவிசுட்டான்), சேகர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20 ரயில் எஞ்சின்களில் 02 எஞ்சின்கள் எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த எஞ்சின்கள் இந்நாட்டில் இயங்குவதற்கு ஏற்றவையா என ஆராயவே இவ்வாறு கொண்டுவரப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ரயில் எஞ்சின்களை ஆய்வு செய்வதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த 05 பரிசோதகர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தனர். நாட்டின் வடக்கு ரயில்வே மார்க்கத்தில் சரக்கு போக்குவரத்திற்கு இந்த எஞ்சின்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்பிரகாரம், கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்த விரிவான அறிக்கை கிடைத்ததும் அது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 24 கைதிகள் காயமடைந்துள்ளனர்.