ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான வர்த்தமானியை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி வௌியிடுவார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். பராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுக்களின் பதவிக்காலங்களும் முடிவடையவுள்ளன. Read more
‘பட்டிப்பொங்கல் பண்ணையாளர்களுக்கு ஒரு கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் அறவழி போராட்டத்தின் 124 ஆவது நாள் பூர்த்தியையும் பட்டிப்பொங்கலையும் முன்னிட்டு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இந்த கவனயீர்ப்பில் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்(IMF) குழு மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று(16) ஆரம்பமாகவுள்ளது. 6 பேர் அடங்கிய IMF பிரதிநிதிகள் குழு, மின்சார சபை, மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 06.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 08 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார். வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு எனப்படும் DAT கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.