Header image alt text

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்ட்டிருந்தவர்களுக்கு நிவாரண உதவி கோரி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் அனுப்பி வைத்திருந்த மூன்று இலட்சம் ரூபா நிதியுதவியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று காரைதீவில் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் ப. இரவிச்சந்திரன் (சங்கரி) அவர்களின் தலைமையில், காரைதீவின் 06, 07, 10 ம் பிரிவுகளில் வாழும் 216 குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது.

Read more

17.01.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் பஞ்சாப் (பாலன் – புதுக்குளம்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயரதரத்தின் விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சையை எதிர்வரும் முதலாம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது. பரீட்சைக்கு முன்னர் வினாத்தாளில் சில கேள்விகள் வௌியாகியமையால் உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி வினாத்தாள்களுக்கான பரீட்சையை மீள நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர் குழாம் இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாய் மற்றும் சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. Read more

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பேரணி தொடர்பில் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் என மருதானை பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித், அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 09 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more