கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்ட்டிருந்தவர்களுக்கு நிவாரண உதவி கோரி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் அனுப்பி வைத்திருந்த மூன்று இலட்சம் ரூபா நிதியுதவியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று காரைதீவில் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் ப. இரவிச்சந்திரன் (சங்கரி) அவர்களின் தலைமையில், காரைதீவின் 06, 07, 10 ம் பிரிவுகளில் வாழும் 216 குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் தோழர் ப. நாகராஜா (கங்கா) மற்றும் கழகப் பிரமுகர்களான தோழர்கள் ரோஸி, குமார், மகேஸ்வரன், வடிவேல் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.