நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அது தமிழ் தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. Read more
அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தை பிரதேசத்தில், சம்மாந்துறைப் பிரதேச அமைப்பாளர் தோழர் ஏ கணேசன் அவர்களின் ஆலோசனையுடன் தெரிவு செய்யப்பட்ட முப்பது குடும்பங்களுக்கு கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வெள்ள நிவாரணமாக தலா ஐந்து கிலோ வீதம் அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச அமைப்பாளருடன் சம்மாந்துறைப் பிரதேச இளைஞர் அணி பொறுப்பாளர் தீ. நிதர்சன், சம்மாந்துறைப் பிரதேச மகளிர் அணிப் பொறுப்பாளர் திருமதி கே. சந்திரமதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இரண்டு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உகாண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (Yoweri Museveni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, “உலகளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தல்” எனும் தலைப்பில் நாளையும் நாளை மறுதினமும் உகாண்டாவின் Kampala நகரில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கை மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து விஜேராம சந்தி வரை பேரணியாக செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்ட நிலையில் அமைதியின்மையை கட்டுபடுத்துவதற்காகவே பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நடைபெற் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பல அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்று(17) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(18) காலை 07 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதனிடையே, வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் விசேட கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது. இந்த சம்மேளனத்தில் 72 தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய தெரிவித்தார்.