நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அது தமிழ் தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரன் தேர்வு செய்யப்பட்டால் அது தமிழ் தேசியத்திற்கு பாதிப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.