அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தை பிரதேசத்தில், சம்மாந்துறைப் பிரதேச அமைப்பாளர் தோழர் ஏ கணேசன் அவர்களின் ஆலோசனையுடன் தெரிவு செய்யப்பட்ட முப்பது குடும்பங்களுக்கு கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வெள்ள நிவாரணமாக தலா ஐந்து கிலோ வீதம் அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச அமைப்பாளருடன் சம்மாந்துறைப் பிரதேச இளைஞர் அணி பொறுப்பாளர் தீ. நிதர்சன், சம்மாந்துறைப் பிரதேச மகளிர் அணிப் பொறுப்பாளர் திருமதி கே. சந்திரமதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளர் திரு. குணாளன் (ஓய்வுநிலைப் பணிப்பாளர் – திருக்கோவில்) அவர்களின் தலைமையில் இருபத்தைந்து குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வுகளில், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி), மாவட்ட செயலாளர் தோழர். ப. நாகராஜா (கங்கா), மாவட்டப் பொருளாளர் தோழர். ஜஃபார், தோழர் ரோசி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் அனுப்பி வைத்திருந்த நிதியுதவியில் இருந்து மேற்படி நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பயனடைந்த மக்கள் புளொட் அமைப்பினருக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

