Header image alt text

19.01.1989இல் வவுனியா சமளங்குளத்தில் மரணித்த தோழர்கள் பெரிசு (நவரத்தினம் – கல்நாட்டினகுளம்), ராஜன் (சீனி – வவுனியா) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலில் இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கீகாரமிக்க கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதி வாழ்க்கை வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று சென்னையில் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போது இந்திய மண்ணை நம்பி தஞ்சம் புகுந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். Read more

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபாலகங்களில் வாகன அபராதத் தொகையை செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது மேல் மாகாணத்தில் இரவு நேர தபாலகங்களில் அபராதப் பணத்தை செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த முயற்சி வெற்றியளித்ததையடுத்து, ஏனைய மாகாணங்களிலும் இதே நடவடிக்கைளை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்கு முன்னர் இதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பப்டுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார். Read more

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவின் விசேட ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது. இவர்கள் கடந்த 11 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்திருந்தனர். 6 பேர் அடங்கிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு, மின்சார சபை, மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடினர். இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான வேலைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. Read more

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். குறித்த சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப கட்ட பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more