திருகோணமலையில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், S.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை தமிழசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில், 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளை பெற்றுக்கொண்டதாக கட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, 47 வாக்குகளை மேலதிகமாக பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியுள்ளதாக அந்த கட்சியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.