22.01.2017 ஆம் ஆண்டு மரணித்த தோழர் கண்ணன் (தர்மரட்ணம் ஜூட் புஷ்பசீலன்- சண்டிலிப்பாய்) அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று….Posted by plotenewseditor on 22 January 2024
Posted in செய்திகள்
22.01.2017 ஆம் ஆண்டு மரணித்த தோழர் கண்ணன் (தர்மரட்ணம் ஜூட் புஷ்பசீலன்- சண்டிலிப்பாய்) அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று….Posted by plotenewseditor on 22 January 2024
Posted in செய்திகள்
22.01.2006 ஆம் ஆண்டு கணேசபுரத்தில் மரணித்த தோழர் தம்பி (தர்மகுலசிங்கம் – வவுனியா) அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 22 January 2024
Posted in செய்திகள்
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரான சமன் திஸாநாயக்க பதில் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன நாடு திரும்பும் நாள் வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 22 January 2024
Posted in செய்திகள்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உயர்நீதிமன்றில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 22 January 2024
Posted in செய்திகள்
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த வௌியேறும் பகுதிக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதிவேக வீதியின் வௌியேறும் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more