Header image alt text

அநாவசியமான பரபரப்பும், அவசியம் தேவைப்பட்ட விளம்பரமும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் 184:137 எனும் வாக்கு விகிதத்தில், சமகாலத்தில் அரசியலுக்குள் நுழைந்து தலைமைத்துவத்தை அடையும் வகையில் காய்களை திட்டமிட்டு நகர்த்தி வந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களை தோற்கடித்துள்ளார்.

Read more

அநாவசியமான பரபரப்பும், அவசியம் தேவைப்பட்ட விளம்பரமும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் 184:137 எனும் வாக்கு விகிதத்தில், சமகாலத்தில் அரசியலுக்குள் நுழைந்து தலைமைத்துவத்தை அடையும் வகையில் காய்களை திட்டமிட்டு நகர்த்தி வந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களை தோற்கடித்துள்ளார்.

Read more

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. வருடாந்த திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (23) நடைபெற்றது. கூட்டத்தில் யாழ். இந்திய துணை தூதரக அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர், கடற்படையினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். Read more

நாளை காலை 8 மணி முதல் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்தியர்களுக்கான 35,000 ரூபா கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டதால், திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். Read more

நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. முன்னதாக தெரிவித்ததை போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி,  உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (22) மனுத்தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார இந்த மனுவை, ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.  மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி,

Read more

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு பேரணி நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன் அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் இணைந்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது. Read more