கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் கைதிகள் சிலர் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் சிலர் புனர்வாழ்வு நிலையத்தில் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். எவ்வாறாயினும், மேலும் சிலர் காணாமற்போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தப்பிச்சென்ற 25 கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 75 கைதிகள் தப்பிச்சென்றதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
தப்பிச் சென்றவர்களில் 17 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.