Header image alt text

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்ட்டிருந்த நாவற்குடாவில் வசிக்கும் பெண்கள் தலைமை தாங்கும் 52குடும்பங்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சமுக மேம்பாட்டுப்பிரிவினால் தலா 2120/- பெறுமதியானஉலர் உணவுப்பொருட்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் இன்று (26-01-2024) நாவற்குடாவில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

Read more

2017.01.26இல் மரணித்த தோழர் பாபு (ராமசாமி காளிமுத்து – தம்பனைச்சோலை) அவர்களின் ஏழாமாண்டு நினைவுநாள் இன்று…

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் முன்னெடுப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, A.H.M.D. நவாஸ், ஷிரான் குணரத்ன, அர்ஜூன ஒபேசேகர உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read more

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேவேளை, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Read more