கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்ட்டிருந்த நாவற்குடாவில் வசிக்கும் பெண்கள் தலைமை தாங்கும் 52குடும்பங்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சமுக மேம்பாட்டுப்பிரிவினால் தலா 2120/- பெறுமதியானஉலர் உணவுப்பொருட்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் இன்று (26-01-2024) நாவற்குடாவில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த தங்கத்துரை கதிர்காமநாதன் அவர்கள் வழங்கி இருந்தார்.இந்த நிகழ்வை கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அ.சாரதா ஏற்பாடு செய்திருந்தார்.
