Header image alt text

இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற நீண்டநாள் மீன்பிடி படகொன்று  சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதாக கடற்படை தெரிவித்தது. கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள படகு, அண்மையில் திக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்றதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டார்.

சுதந்திர தின ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 2  ஆம் திகதி வரை காலை 6 மணி முதல் 8.30 வரையிலும், காலை 11 மணி முதல் மதியம் 12.30 வரையிலும் இந்த விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான வீதி மற்றும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான வீதி ஆகிய வீதிகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read more

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தமையினால் வெற்றிடமாகியுள்ள புத்தளம் மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கரவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.  நேற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக புத்தளம் மாவட்ட செயலாளர் சுனந்த ஹேரத் கூறினார்.  ஜகத் பிரியங்கரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக விரைவில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். Read more