இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தமையினால் வெற்றிடமாகியுள்ள புத்தளம் மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கரவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.  நேற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக புத்தளம் மாவட்ட செயலாளர் சுனந்த ஹேரத் கூறினார்.  ஜகத் பிரியங்கரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக விரைவில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு பட்டியலின் பிரகாரம் ஜகத் பிரியங்கரவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது.