கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முரண்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களும் புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிக்கப்படுவதே குறித்த முரண்பாடுகளுக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாதத்தில் இரண்டு தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ள போதிலும் இதற்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டுமென புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.