கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு பாரதி மகளிர் அமைப்பு உறுப்பினர்கள் 13 பேருக்கு 25740/- பெறமதியான உலர்உணவுப்பொதிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சமுக மேம்பாட்டுப்பிரிவினால் கழகத்தின் மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் இன்று (28-01-2024) புதுக்குடியிருப்பில் கட்சியின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை பிரித்தானிய கிளை உறுப்பினர்.த.சிவபாலன் அவர்கள் வழங்கி இருந்தார்.

இந்த நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கா.கமலநாதன், பொருளாளர் கிருஸ்ணராஜாஜி, மகளிர் அணி பொறுப்பாளர் க.இந்திராணி, புதுக்குடியிருப்பு அமைப்பாளர் த.கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.