Header image alt text

மறைந்த புளொட் சுவிஸ் உறுப்பினர் மனோகரன் முருகதாசன் அவர்களின் நினைவாக அவரது பிறந்த ஊரான புலோலியில் அமைந்துள்ள கந்த முருகேசனார் சனசமூக நிலையத்துக்கு புளொட் சுவிஸ் தோழர்களின் நிதியுதவியின் கீழ் நூலகக் கட்டிடத் திருத்தத்துக்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 27.01.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளியிலே, குறித்த முன்பள்ளியின் முகாமைத்துவக் குழுவின் தலைவர் மு.ஜெகதேவன் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

Read more

பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் 166,998 பேர் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்றிருந்தனர். அவர்களில் 84, 150 பேர் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தனர். Read more

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வருகைதரவுள்ள அவர் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருடன் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்விலும் அவர் பங்குபற்றவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுததாரிகள் குழுவின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட மீனவர்கள் Seychelles நாட்டின் தலைநகருக்கு அழைத்துச்செல்லப்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை கடற்படையினர் தலையீட்டுடன் Seychelles பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். ஆயுததாரிகள் குழுவின் மூவர் Seychelles பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. Read more