மறைந்த புளொட் சுவிஸ் உறுப்பினர் மனோகரன் முருகதாசன் அவர்களின் நினைவாக அவரது பிறந்த ஊரான புலோலியில் அமைந்துள்ள கந்த முருகேசனார் சனசமூக நிலையத்துக்கு புளொட் சுவிஸ் தோழர்களின் நிதியுதவியின் கீழ் நூலகக் கட்டிடத் திருத்தத்துக்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 27.01.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளியிலே, குறித்த முன்பள்ளியின் முகாமைத்துவக் குழுவின் தலைவர் மு.ஜெகதேவன் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
தோழர். மனோகரன் முருகதாஸ் அவர்கள் நினைவாக சுவிஸ் தோழர்கள் வழங்கிய நிதியின் ஒரு பகுதி புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரும் ஓய்வுபெற்ற புலோலி வாழ் தபாலதிபர் சந்திரமோகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தோழர்.முருகதாஸின் சகோதரர் முன்னிலையில் இவ்வுதவி செய்யப்பட்டது.
நிகழ்வில் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டு மேற்படி நூலகக் கட்டிடத் திருத்தத்துக்கான நிதியுதவியினை நேரில் வழங்கி வைத்திருந்தார்.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், புளொட் யாழ் மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபன், முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் க.பரஞ்சோதி, புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஓய்வுபெற்ற தபாலதிபர் சந்திரமோகன், மனோகரன் முருகதாசன் அவர்களின் சகோதரர் மற்றும் முன்பள்ளிச் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வுக்கு பிரித்தானிய புளொட் தோழர் பாலா அவர்களுடன் இணைந்து புளொட் சுவிஸ் தோழர்களான ரஞ்சன், செல்வபாலன், வரதன், ரமணன், அன்ரன், பாபு, காந்தன், மனோ, ஆனந்தன், பிரபா, ராசன், புவி, ரூபன், மோகன் ஆகியோர் நிதி உதவி வழங்கி இருந்தனர்.
