TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கையை கட்டாயமாக்குவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. Read more
சுகாதார அமைச்சுக்கு முன்பாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, சம்பளம், கொடுப்பனவு பிரச்சினை உள்ளிட்ட சுகாதாரத்துறையில் உள்ள ஏனைய நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. வைத்தியர்களுக்கான கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிப்பது உள்ளடங்கலாக அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் பொருளாதார நியாயத்தை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த பேரணி இடம்பெறுகிறது. கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது.