Header image alt text

சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாயாக அறவிடப்படவுள்ளது.

Transparency International நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.  0 (அதிக ஊழல்) – 100 (ஊழலற்ற நாடு) எனும் அளவில் நாடுகளை மதிப்பீடு செய்து Transparency International நாடுகளை தரப்படுத்துகின்றது. இந்த பட்டியலில் 180 நாடுகள் தரப்படுத்தப்படுகின்றன.  இந்த பட்டியலுக்கு அமைய, இலங்கை 2023 ஆம் ஆண்டு 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னர்   இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்தது. Read more

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஸ நியமக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கான நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செங்கடலில் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து  இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் U.குமார தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more