Posted by plotenewseditor on 5 January 2024
Posted in செய்திகள்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் தலையீடு செய்யாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என்பதால், அரசாங்கம் இதில் தலையீடு செய்யாதென அவர் கூறியுள்ளார். அதேபோன்று, அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more