ஆயுததாரிகள் குழுவின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட மீனவர்கள் Seychelles நாட்டின் தலைநகருக்கு அழைத்துச்செல்லப்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை கடற்படையினர் தலையீட்டுடன் Seychelles பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். ஆயுததாரிகள் குழுவின் மூவர் Seychelles பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. Read more
28.01.2016இல் மரணித்த மட்டக்களப்பு உன்னிச்சை இருநூறுவில்லை பிறப்பிடமாகவும், புதூரை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் வெள்ளையன் (நாகமணி சிவராசா – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் – வவுணதீவு) அவர்களின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று…
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்ட்டிருந்தவர்களுக்கு நிவாரண உதவி கோரி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, புளொட் அமைப்பின் கனடா கிளையினரும்,பிரித்தானிய கிளை உறுப்பினர் முகுந்தன் அவர்களும் அனுப்பி வைத்திருந்த 250000/ நிதியுதவியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று(25- 01-2024) மாவடிவேம்பில்நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு பாரதி மகளிர் அமைப்பு உறுப்பினர்கள் 13 பேருக்கு 25740/- பெறமதியான உலர்உணவுப்பொதிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சமுக மேம்பாட்டுப்பிரிவினால் கழகத்தின் மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் இன்று (28-01-2024) புதுக்குடியிருப்பில் கட்சியின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை பிரித்தானிய கிளை உறுப்பினர்.த.சிவபாலன் அவர்கள் வழங்கி இருந்தார்.
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்துரைச் சேர்ந்த கழக தோழர் பா.சிவசாமி அவர்கள் மருத்துவ தேவைக்காக பிரித்தானிய கிளையைச் சேர்ந்த தோழர் முகுந்தன் அவர்களிடம் விடுத்த உதவி கோரிக்கையின் பிரகாரம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சமுகமேம்பாட்டுப்பிரிவுக்கூடாக 12700/-ரூபாவை தோழர் முகுந்தன் அவர்கள் வழங்கியுள்ளார். இவ் நிதி உதவியை கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா அவர்கள் இன்று (28-01-2024)தோழர் சிவசாமியிடம் கையளித்தார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 109 எனும் புதிய விசேட இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இலக்கத்திற்கு அளிக்கப்படும் முறைப்பாடுகளுக்கு 48 மணித்தியாலங்களில் தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வெயாங்கொடை காவல் பிரிவுக்குட்பட்ட சமூக காவல் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்.காங்சேன்துறையிலிருந்து தமிழகத்தின் நாகப்பட்டிணம் வரை இந்த படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் சேவை 4 தசாப்தங்களாக தடைப்பட்டிருந்தது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முரண்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களும் புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிக்கப்படுவதே குறித்த முரண்பாடுகளுக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாதத்தில் இரண்டு தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற நீண்டநாள் மீன்பிடி படகொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதாக கடற்படை தெரிவித்தது. கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள படகு, அண்மையில் திக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்றதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டார்.
சுதந்திர தின ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை காலை 6 மணி முதல் 8.30 வரையிலும், காலை 11 மணி முதல் மதியம் 12.30 வரையிலும் இந்த விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான வீதி மற்றும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான வீதி ஆகிய வீதிகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.