இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தமையினால் வெற்றிடமாகியுள்ள புத்தளம் மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கரவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார். நேற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக புத்தளம் மாவட்ட செயலாளர் சுனந்த ஹேரத் கூறினார். ஜகத் பிரியங்கரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக விரைவில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். Read more
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்ட்டிருந்த நாவற்குடாவில் வசிக்கும் பெண்கள் தலைமை தாங்கும் 52குடும்பங்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சமுக மேம்பாட்டுப்பிரிவினால் தலா 2120/- பெறுமதியானஉலர் உணவுப்பொருட்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் இன்று (26-01-2024) நாவற்குடாவில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
2017.01.26இல் மரணித்த தோழர் பாபு (ராமசாமி காளிமுத்து – தம்பனைச்சோலை) அவர்களின் ஏழாமாண்டு நினைவுநாள் இன்று…
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் முன்னெடுப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, A.H.M.D. நவாஸ், ஷிரான் குணரத்ன, அர்ஜூன ஒபேசேகர உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேவேளை, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
25.01.1999இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் சதீஸ் (தில்லைநாதன் சந்திரமோகன்) அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…
கழகத் தோழர் லதன் (முத்தையா யோகராசன் – திருகோணமலை) அவர்கள் நேற்று (24.01.2024) மரணமெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கிறோம்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மீனவர்களும் ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்வாக வருடாந்தம் நடைபெற்று வருகின்றது. இலங்கையில் இருந்து 4,000 பேரும் தமிழகத்தில் இருந்து 4,000 பேரும் என மொத்தம் 8,000 பேர் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிக வரையறைகளை விதிக்கும், தௌிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அவை முதலீடுகளையும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும் எனவும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் X தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த சட்டத்திருத்தம் மூலம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சிவில் சமூகமும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அடங்கலாக பிரதான தரப்பினர் முன்வைத்த முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் கைதிகள் சிலர் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் சிலர் புனர்வாழ்வு நிலையத்தில் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். எவ்வாறாயினும், மேலும் சிலர் காணாமற்போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தப்பிச்சென்ற 25 கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.