அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (22) மனுத்தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார இந்த மனுவை, ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் ஊடாக தாக்கல் செய்துள்ளார். மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி,
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு பேரணி நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன் அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் இணைந்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.
22.01.2017 ஆம் ஆண்டு மரணித்த தோழர் கண்ணன் (தர்மரட்ணம் ஜூட் புஷ்பசீலன்- சண்டிலிப்பாய்) அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று….
22.01.2006 ஆம் ஆண்டு கணேசபுரத்தில் மரணித்த தோழர் தம்பி (தர்மகுலசிங்கம் – வவுனியா) அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரான சமன் திஸாநாயக்க பதில் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன நாடு திரும்பும் நாள் வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உயர்நீதிமன்றில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த வௌியேறும் பகுதிக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதிவேக வீதியின் வௌியேறும் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், S.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை தமிழசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில், 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளை பெற்றுக்கொண்டதாக கட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாலஸ்தீன வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமைச்சர் கலாநிதி ரியாட் மல்கிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று ஆரம்பமான “G77 மற்றும் சீனா” 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மாலைதீவு உப ஜனாதிபதி ஹுசைன் மொஹமட் லத்தீப் (Hussain Mohamed Latheef) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று ஆரம்பமான “G77 மற்றும் சீனா” 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.